பிரபுதேவாவின் ’பொன்மாணிக்கவேல்’ ரிலீஸ் அறிவிப்பு!

பிரபுதேவாவின் ’பொன்மாணிக்கவேல்’ ரிலீஸ் அறிவிப்பு!
siva| Last Modified ஞாயிறு, 4 ஜூலை 2021 (17:59 IST)
பிரபுதேவாவின் ’பொன்மாணிக்கவேல்’ ரிலீஸ் அறிவிப்பு!
பிரபுதேவா நடித்த ’பொன்மாணிக்கவேல்’ என்ற திரைப் படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு வருடம் ஆன நிலையில் தற்போது இந்த படம் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
’பொன்மாணிக்கவேல்’ படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய வேண்டும் என படக்குழுவினர் மிகுந்த ஆவலுடன் காத்திருந்த நிலையில் திரையரங்குகள் இப்போதைக்கு திறக்கப்படாது என்ற நிலை ஏற்பட்டதால் வேறு வழியின்றி தற்போது ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கின்றனர்.

’பொன்மாணிக்கவேல்’ திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருப்பதாக இந்த படத்திற்கு இசை அமைத்த டி இமான் அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பொன்மாணிக்கவேல் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளதை அடுத்து பிரபுதேவா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் சுரேஷ் மேனன், சூரி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இமான் இசையில் வெங்கடேஷ் ஒளிப்பதிவு உருவாகியுள்ள இந்த படத்தை முகில் செல்லப்பன் என்ற ஒரு இயக்கி உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :