11 ஆண்டு மண வாழ்க்கைப்பிறகு பிரபல நடிகை விவாகரத்து !

dia mirza
Last Updated: வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (19:38 IST)
1990 - 2000ஆண்டுகளில் சினிமாவில் பிரபல நடிகையாக விளங்கியவர் தியா மிர்சா. இவர் அரவிந்த் சாமி நடித்த என் சுவாசக் காற்றே என்ற படத்தில்  டான்சராக அறிமுகமானார். அதன் பின்னர் பாலிவுட்டுக்கு சென்றுவிட்டார்.  அங்கு நிறைய படங்களில் நடித்து வெற்றிகரமாக வலம் வந்தார்.
பின்னர் சில ஆண்டுகளில் திருமணமானதால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.  இந்நிலையில் தன் ஆண்டுகால மணவாழ்க்கைக்கு பிறகு கணவரை விவாகரத்து செய்துள்ளதாக அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் நானும், என் கணவரும்  பிரிந்தாலும் கூட ஒருவருக்கொருவர் நண்பர்களாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 
 


இதில் மேலும் படிக்கவும் :