திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 8 மார்ச் 2020 (08:03 IST)

ஆனந்தராஜ் தம்பியின் தற்கொலை வழக்கு – தந்தை மற்றும் மகன் கைது !

ஆனந்தராஜின் தம்பி கனகசபை

நடிகர் ஆனந்தராஜின் தம்பி கனகசபை என்பவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது அண்ணன் மற்றும் அவரது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட ஆனந்த்ராஜ் சகோதரர் கனகசபை குறித்த செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தனது சகோதரர் மரணம் குறித்து விளக்கமளித்த நடிகர் ஆனந்த்ராஜ், தனது சகோதரர் கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவரை ஒரு சிலர் மிரட்டியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கனகசபையின் கடிதத்தில் அவரது அண்ணன் பாஸ்கர் என்கிற அண்ணாமலை மற்றும் அவரது மகன் சிவசந்திரன் ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து தற்கொலைக்குத் தூண்டிய பிரிவில் வழக்கை மாற்றிய போலிஸார் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.