33 வருடங்களுக்கு பின் மீண்டும் ‘ஊமை விழிகள்: ஹீரோ யார்?

Last Modified திங்கள், 7 அக்டோபர் 2019 (18:08 IST)
கடந்த 1986ஆம் ஆண்டு ஆபாவாணன் தயாரிப்பில் ஆர்.அரவிந்தராஜ் இயக்கத்தில் விஜயகாந்த், கார்த்திக், அருண்பாண்டியன் சந்திரசேகர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் நடிப்பில் ஒரு த்ரில்லர் படம் உருவாகியது. பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய இந்த படம் தமிழின் மிகச்சிறந்த த்ரில்லர் படமாக கொண்டாடப்பட்டது

இந்த நிலையில் இதே டைட்டிலில் தற்போது ஒரு படம் உருவாகவுள்ளது. ‘ஊமை விழிகள்’ என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இந்த படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்கவுள்ளார். விஎஸ் இயக்கத்தில் தனஞ்செயன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஒரு கண்ணின் கருவிழியில் பிரபுதேவா இருப்பது போன்று ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் இருப்பதால் இந்த படமும் த்ரில்லர் படமாக இருக்கும் என கருதப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த படம் ஊமை விழிகள் படத்தின் ரீமேக்கா? அல்லது இரண்டாம் பாகமா? என்பது குறித்த தகவல் இதுவரை இல்லை


இதில் மேலும் படிக்கவும் :