நயன்தாரா திருமணத்தை அடுத்து இன்னொரு நடிகையின் திருமண வீடியோ.. அதுவும் நெட்பிளிக்ஸ் தான்..
நடிகை நயன்தாராவின் திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகு, அந்த திருமண வீடியோ நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இது நிறைய பாராட்டுகளை பெற்றது. இதை தொடர்ந்து, மற்றொரு பிரபல நடிகையின் திருமண வீடியோவும் நெட்ப்ளிக்ஸ் உரிமையாக்கி, அதற்காக ரூ.50 கோடி செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதல் மற்றும் திருமணம் குறித்த வீடியோ சமீபத்தில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த வீடியோ வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, தனுஷை நயன்தாரா குற்றம் சாட்டிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவே வீடியோவுக்கு விளம்பரமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகை சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா திருமணம், டிசம்பர் 4ஆம் தேதி நடக்க உள்ளது. அந்த திருமண வீடியோ உரிமையை நெட்ப்ளிக்ஸ் ரூ.50 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ள இந்த திருமண வீடியோ, ஜனவரி மாதத்தில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran