புது நடிகைகளுக்கு என் அட்வைஸ் இதுதான்... மனம் திறக்கும் அஞ்சலி

VM| Last Modified சனி, 30 மார்ச் 2019 (16:45 IST)
புதிதாக நடிக்க வரும் நடிகைகளுக்கு நான் சொல்லும் அறிவுரை என்னவென்றால் முழுமையான நடிகை ஆவதற்கு நடிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் அக்கறையும், ஆர்வமும் இருக்க வேண்டும் என்று நடிகை அஞ்சலி கூறியிருக்கிறார். 
 

 
ராம் இயக்கிய கற்றது தமிழ் படம் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கும் நடிகை அஞ்சலி, தற்போது பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்திருக்கிறார்.  
 
அவர் கூறுகையில், நான் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகப்போகிறேன் என்று தகவல்கள் பரவி உள்ளன. அதில் சிறிதும் உண்மை இல்லை. திருமண செய்தியே பொய். அப்படி திருமணம் செய்துகொண்டாலும் சினிமாவை ஏன் விட வேண்டும். கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் உள்ளது. 
 
புதிதாக நடிக்க வரும் நடிகைகளுக்கு நான் சொல்லும் அறிவுரை என்னவென்றால் முழுமையான நடிகை ஆவதற்கு நடிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் அக்கறையும், ஆர்வமும் இருக்க வேண்டும். சாதிக்க பிடிவாதமும் இருக்க வேண்டும். என்னை பற்றி வதந்திகள் வரும்போது ஆரம்பத்தில் வருத்தப்பட்டேன். இப்போது கண்டு கொள்வது இல்லை என்று அஞ்சலி ஓபனாகப் பேசியிருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :