செவ்வாய், 11 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 16 ஆகஸ்ட் 2025 (09:36 IST)

19 வயதில் பல முட்டாள்தனமான விஷயங்களைப் பேசிவிட்டேன் – பிபாஷா பாஸு உருவக் கேலிக்கு மிருனாள் வருத்தம்!

19 வயதில் பல முட்டாள்தனமான விஷயங்களைப் பேசிவிட்டேன் – பிபாஷா பாஸு உருவக் கேலிக்கு மிருனாள் வருத்தம்!
பாலிவுட் நடிகையான மிருனாள் தாக்கூர் சீதாராமம் திரைப்படம்  மூலமாக தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். தெலுங்கில் உருவான அந்த திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஹிட் ஆகி ஆகியதால் ஒரே படத்தில் தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்.

இந்நிலையில் பாலிவுட் முன்னணி நடிகையான பிபாஷா பாஸுவை அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் உருவகேலி செய்யும் விதமாகப் பேசிய வீடியோ இப்போது பரவி வருகிறது.  அந்த வீடியோவில் “பிபாஷா பாஸுவின் தசைகள் ஆண்கள் போல வலுவாக உள்ளன. ஆண்களைப் போல இருக்கும் பெண்களை திருமணம் செய்துகொள்பவர்களுக்கு பிபாஷா பாஸு இருகிறார் ” எனப் பேசியிருந்தார். இந்த வீடியோ அவருக்கு எதிராக விமர்சனங்களை உருவாக்கியது.

இதற்குப் பதிலளித்த பிபாஷா பாஸு “வலிமையான பெண்கள் அனைவரையும் தூக்கி விடுவார்கள். அழகான பெண்களே உங்கள் தசைகளை வலிமையாக்கிக் கொள்ளுங்கள். அதுவும் பெண்களுக்கு அழகுதான். பெண்கள் உடல்ரீதியாக வலிமையாக இருக்கக் கூடாது என்ற முட்டாள்தனமாக சிந்தனையைத் தூக்கிப் போடுங்கள்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் மிருனாள் தாக்கூர். அதில் “19 வயதில் நான் பல முட்டாள்தனமாக விஷயங்களைப் பேசியுள்ளேன். நான் நகைச்சுவையாக பேசியது அடுத்தவர்களைப் புண்படுத்தும் என்பது கூட தெரியவில்லை. அதற்காக இப்போது நான் வருந்துகிறேன். யாரையும் உடல் ரீதியாக அவமானப்படுத்துவது என் நோக்கமல்ல. அழகு எல்லா வடிவங்களிலும் உள்ளது என்பதை எனக்குக் காலம் சொல்லிக்கொடுத்துள்ளது” என வருத்தம் தெரிவித்துள்ளார்.