1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 4 மே 2018 (20:34 IST)

“மிஸ்டர் பர்ஃபெக்ட் அருள்நிதி” – புகழும் தயாரிப்பாளர்

அருள்நிதியை ‘மிஸ்டர் பர்ஃபெக்ட்’ எனப் புகழ்ந்துள்ளார் தயாரிப்பாளர் டில்லி பாபு. 
மு.மாறன் இயக்கத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. அஜ்மல், மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், சாயா சிங், சுஜா வாருணி, லட்சுமி ராமகிருஷ்ணன், ஆனந்தராஜ், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ்.  இசையமைத்துள்ளார்.
 
இந்தப் படத்துக்கு முதல் ரசிகனே, இந்தப் படத்தைத் தயாரித்துள்ள டில்லி பாபு தான். “திரில்லர் வகை படங்களின் தீவிர ரசிகனாக இருப்பதால், இயக்குனர்  மு.மாறனின் கதையைக் கண்டு வியந்தேன். சொன்ன கதையை திரையில் காட்சிகளாக சிறப்பாக, திறமையாக கொண்டு வந்தது மகிழ்ச்சி. இந்தப் படத்தில்,  சீட்டின் நுனிக்கு வரவைக்கும் காட்சிகள் நிறைய உள்ளன, அவை உங்கள் கண்களை இமைக்க விடாது. ஈர்க்கக் கூடிய விஷயங்களை திரைக்கதையில் சரியாகப்  பிணைத்துள்ளார்.
சமீபத்திய மியூசிக் சென்சேஷன் சாம் சிஎஸ், படத்துக்கு இசையமைத்திருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். பின்னணி இசையில் தனக்கு ஒரு தனி பாணி உண்டு  என்று இந்த படத்திலும் தன் திறமையால் நிரூபித்திருக்கிறார் சாம். மொத்தப் படத்திலும் அருள்நிதி ஒரு மிஸ்டர் பர்ஃபெக்ட்டாக இருந்தார். தனது நடிப்பை  மெருகேற்ற அவர் காட்டிய ஈடுபாடு ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலித்தது. ‘மௌன குரு’ எப்படி அவரின் கேரியரை உயர்த்தியதோ, அப்படி இந்தப் படமும்  அவரை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்லும்” என்று புகழ்ந்து பேசியுள்ளார் டில்லி பாபு.