திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 ஜூலை 2024 (10:07 IST)

ஊழலை எதிர்த்து நடிக்க ஊழல் செய்யும் அரசியல் தலைவர்.. இயக்குனர் மோகன் ஜி கிண்டல்..!

ஊழலை எதிர்த்து நடிக்க இன்றைய காலகட்டத்தில் ஊழல் செய்யும் அரசியல் தலைவர் சரிவர மாட்டார் என்று இயக்குனர் மோகன் ஜி தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். 
 
கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அந்த படம் ஊழல் குறித்து பரபரப்பாக பேசியது என்பதும் அதனால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்தது. 
 
இந்த நிலையில் தற்போது பொதுமக்களே ஊழலுக்கு தயாராகிவிட்டனர் என்பதும் ஊழல் அரசியல் செய்யும் அரசியல்வாதிகளை கூட ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராகி விட்டார்கள் என்ற காலகட்டத்தில் ஊழல் குறித்த படம் இந்தியன் 2 வந்திருப்பது முரண்பாடாக கருதப்படுகிறது. 
 
இன்றைய காலகட்டத்தில் ஊழல் செய்யாத அரசியல் தலைவர்களே இல்லை என்றாகிவிட்ட நிலையில் ஊழலை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்றே கூற வேண்டும். இந்த நிலையில் ஊழல் குறித்த கதையம்சம் கொண்ட ‘இந்தியன் 2’ படம் குறித்து இயக்குனர் மோகன் ஜி தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
 
ஊழலை எதிர்த்து நடிக்க இன்றைய கால கட்டத்தில் ஊழல் செய்யும் அரசியல் தலைவர் சரிவரமாட்டார்.. மக்கள் அவரை ஊழல்வாதியாக தான் பார்ப்பார்கள்.. அவர் ஊழலை எதிர்த்து கேள்வி கேட்டால் சிரிப்பார்கள்.. இதற்கு தமிழில் நல்ல வார்த்தை ஒன்று உண்டு.. #ஊழ்வினை
 
Edited by Mahendran