பிரபல நடிகைக்கு ஆபாச மெசேஜ்…. மாணவர் கைது

sinoj| Last Modified செவ்வாய், 6 ஜூலை 2021 (15:58 IST)

 


தமிழ் சினிமாவில் அம்புலி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகப் பங்கேற்றதன் மூலம் மக்களிடம் பிரபலமானார்.

இவர் சில முன்னணி நடிகர்களில் படங்களில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில் இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு மர்ம நபர் ஒருவர் ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி சனம் ஷெட்டி 2 நாட்களுக்கு முன் போலீஸில் புகாரளித்தார்.

 இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் சனம் ஷெட்டிக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய  திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராய் ஜான் பாலை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்இதில் மேலும் படிக்கவும் :