ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (17:35 IST)

மழை பிடிக்காத மனிதன்' படத்தில் எனக்கு தெரியாமலேயே 1 நிமிட காட்சிகள்: விஜய் மில்டன்

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் எனக்கே தெரியாமல் ஒரு நிமிட காட்சி அந்த படத்தில் இடம் பெற்றுள்ளதாக இயக்குனர் விஜய் மில்டன் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தில் தனக்கே தெரியாமல் ஒரு நிமிடத்திற்கு காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக இயக்குனர் விஜய் மில்டன் கூறியுள்ளார். இந்த காட்சிகள் எப்படி இடம்பெற்றது என்று எனக்கு தெரியாது என்று அவர் கூறியதோடு ரசிகர்களுக்கு ஒரு வேண்டுதலையும் வேண்டுகோளையும் எடுத்துள்ளார்

இந்த படத்தின் நாயகன் சென்னைக்கு வரும்போது அவன் யார் என்று தெரியாது, அவனது பின்னணி என்ன, எதற்காக சென்னைக்கு வருகிறான், அவனுடன் இருப்பவர்கள் யார் யார், அவருடைய முகத்தில் உள்ள காயத்துக்கு என்ன காரணம் என்பது எதுவுமே தெரியாமல் கேள்வியாக இந்த படத்தை இடைவேளை வரை நகர்த்திருப்பேன்.

ஆனால் இந்த படத்தில் ஒரு நிமிட காட்சி எனக்கே தெரியாமல் இணைத்து அதில் நாயகன் யார்? அவனது பின்னணி என்ன என்பதை தெளிவாக காட்டி இருக்கிறார்கள். இந்த காட்சி எப்படி வந்தது என்று எனக்கே தெரியவில்லை’ என்று கூறியுள்ளார்

இயக்குனருக்கே தெரியாமல் ஒரு நிமிட காட்சியை இணைத்து அந்த படத்தையே காலி பண்ணும் வகையில் செய்திருப்பது எந்த வகையில் நியாயம் என்று எனக்கு தெரியவில்லை. எனவே ரசிகர்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன், தயவுசெய்து அந்த ஒரு நிமிட காட்சியை மறந்து விட்டு படம் பாருங்கள்’ என்று கூறியுள்ளார். அவரது இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran