1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 3 மே 2023 (15:32 IST)

நன்றாக உடல்நிலை தேறிய நிலையில் திடீரென இறந்துவிட்டார்.. மனோபாலா மகன் உருக்கம்..!

நடிகர் மனோபாலா கடந்த சில நாட்களாக உடல்நிலை தேறி வந்த நிலையில் திடீரென இறந்துவிட்டார் என அவரது மகன் கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார். 
 
நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் மனோபாலா இன்று காலமான நிலையில் திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. முதலமைச்சர் முக ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், டிடிவி தினகரன், இளையராஜா, பாரதிராஜா உள்பட பலர் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர் 
 
இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த மனோபாலாவின் மகன் தனது தந்தை கடந்த சில வாரங்களாகவே உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் அவரது உடல்நிலை படிப்படியாக தேறி வந்த நிலையில் திடீரென அவர் இறந்துவிட்டது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றும் தெரிவித்தார்.
 
 மேலும் தனது தந்தையின் இறுதி சடங்கு நாளை நடைபெறும் என்றும் பத்திரிகையாளர்கள் அனைவரும் எங்களுக்கு ஒத்துழைப்பு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
 
Edited by Mahendran