வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 14 நவம்பர் 2022 (15:23 IST)

மகேஸ்பாபுவின் தந்தை கிருஷ்ணாவுக்கு தீவிர சிகிச்சை...மருத்துவர்கள் அறிக்கை

Krishna ,makaesh babu
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணாவின் உடல் நிலை மோசமாக உள்ளதாகக  மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னாள் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா. இவர் பண்டாட்டி கபுரம்,  சீதராம ராஜூ,கூடசேரி உள்ளிட்ட பல படங்களில் நடித்து 70,80 களில்  முன்னணி நடிகராகவும்,சூப்பர் ஸ்டாராகவும் வலம் வந்தார்.

இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இந்த நிலையில்,  உடல் நிலை சரியில்லாததால், இன்று சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணாவை, ஐதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம், இதுகுறித்து, அறிக்கை வெளியிட்டுள்ளது, அதில், கார்டியாக் அரஸ்ட் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீ காட்டமானேனி கிருஷ்ணாவின் உடல் மோசமான நிலையில் உள்ளதாகவும், தற்போது, ஐசியுவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

அவரை  நலம்பெற வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Edited by Sinoj