இன்னும் விற்பனை ஆகாத ‘மதராஸி’ படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமை… காரணம் என்ன?
அமரன் படத்தின் இமாலய வெற்றியை அடுத்து சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்து முடித்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி வசந்த், வித்யுத் ஜமால் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதற்காகப் படத்தை ப்ரமோட் செய்யும் பணிகளில் முருகதாஸ் ஈடுபட்டு வருகிறார்.
சிவகார்த்திகேயனின் முந்தைய படமான அமரன் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனால் மதராஸி படத்தின் வியாபாரத்தில் பலன் கிடைத்துள்ளது. இது குறித்து பேசியுள்ள முருகதாஸ் “அமரன் படத்தால் சிவகார்த்திகேயனை விட, தயாரிப்பாளர் கமல்ஹாசனை விட எனக்குதான் அதிக நன்மை. இதை நான் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியிடம் கூறினேன். ஏனென்றால் மதராஸி பெரிய படம்.” எனக் கூறியுள்ளார்.
ஆனால் இன்னும் மதராஸி படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமை விற்பனை ஆகவில்லையாம். அதற்குக் காரணம் அமரன் படத்தின் வெற்றியால் மதராஸி படத்தின் தயாரிப்பாளர் மிகப்பெரிய தொகையை விலையாக நிர்ணயித்துள்ளாராம். ஆனால் அவ்வளவு பெரிய தொகைக்குப் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் அஞ்சுவதாக சொல்லப்படுகிறது.