ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2022 (10:46 IST)

ஒரு வருடத்தை நிறைவு செய்த சிம்புவின் ‘மாநாடு’: தயாரிப்பாளரின் நன்றி அறிக்கை!

Maanadu
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த ஆண்டு இதே நாளில் வெளியான நிலையில் இன்றுடன் அந்த படம் வெளியாகி ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
 
சின்னதா ஒன்றை ஆரம்பித்தால்‌ தைரியம்‌ கொஞ்சம்‌ கூடவே இருக்கும்‌... 
 
ஆனா கொஞ்சம்‌ அகலமாகக்‌ கால்‌ பதிக்கும்போது மிகப்‌ பதட்டமும்‌,தைரியக்‌
குறைச்சலும்‌ தானாகவே வந்துவிடும்‌. ‘மாநாடு’ படத்தைத்‌ தொடங்கியபோது அந்த இரண்டையும்‌ கடந்து அடுத்த கட்டம்‌
அடைந்தேன்‌.
 
அதற்குப்‌ பெருந்துணையாக இருந்தது சிம்பு, இயக்குநர்‌ வெங்கட்‌ பிரபு ,எஸ்.ஜே சூர்யா, லிட்டில்‌ மேஸ்ட்ரோ யுவன்‌, கல்யாணி பிரியதர்ஷன்‌ மற்றும்‌ நடித்த அனைத்து நடிகர்‌ நடிகைகள்‌, ஃபைனான்சியர்கள்‌ உத்தம்‌ சந்த்‌ அவர்கள்‌ மற்றும்‌ திருப்பூர்‌ சுப்ரமணியன்‌ அண்ணா, ஒளிப்பதிவாளர்‌ ரிச்சர்ட்‌ எம்‌ நாதன்‌, எடிட்டர்‌ கே.எல்‌.பிரவீண்‌, கலை இயக்குநர்‌ உமேஷ்‌, சண்டைப்‌ பயிற்சி ஸ்டண்ட்‌ சில்வா, உதவி இயக்குநர்கள்‌, சிலம்பரசனின்‌ ரசிகர்கள்‌, தொழில்‌ நுட்பக்கலைஞர்கள்‌, ஊடக மற்றும்‌ பத்திரிகை நண்பர்கள்‌, சக தயாரிப்பாளர்கள்‌, விநியோகஸ்தர்கள்‌, திரையரங்க அதிபர்கள்‌, அலுவலக ஊழியர்கள்‌, பி ஆர்‌ ஓ என மாநாடு படத்திற்காக உழைத்த அத்தனை பேரும்தான்‌.
 
இந்த ஒரு ஆண்டு நிறைவு நாளில்‌ அனைவருக்கும்‌ நிறைந்த மனதுடன்‌ நன்றி கூறிக்கொள்கிறேன்‌. என்‌ எல்லா பயணத்திலும்‌ நீங்கள்‌ உடனிருக்கும்‌ நம்பிக்கையில்‌ உழைக்கிறேன்‌. மீண்டும்‌ மீண்டும்‌ நல்ல படங்களைத்‌ தர விளைகிறேன்‌.
 
இவ்வாறு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran