ஒரு வழியாக மாமனிதனுக்கு வந்த விடிவுகாலம்… சீனு ராமசாமி வெளியிட்ட அப்டேட்!
யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கியுள்ள மாமனிதன் திரைப்படம் ஒரு ஆண்டுக்கும் மேலாக ரிலிஸ் ஆகாமல் உள்ளது.
சீனுராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து மாமனிதன் படம் உருவாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டே முடிந்தது. ஆனால் இன்னமும் ரிலிஸ் ஆகாமல் உள்ளது. இந்த படத்தைத் தயாரித்துள்ள யுவன் ஷங்கர் ராஜா இப்போது ரிலிஸுக்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் சேர்ந்து இசையமைத்துள்ளனர்.
படம் முடிந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும் இன்னும் ரிலிஸாகவில்லை. இது சம்மந்தமாக யுவனுக்கும் சீனு ராமசாமிக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகவும் அதனால் சீனு ராமசாமிக்கு சம்பள பாக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது.
ஆனால் இப்போது இரு தரப்புக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் முடிந்து படத்தின் படத்தொகுப்பு பணிகள் நிறைவடைந்து படம் அடுத்த வாரம் சென்ஸாருக்கு செல்ல உள்ளது. இது சம்மந்தமாக படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி 37 நாள் படப்பிடிப்பில் உருவான மாமனிதன் திரைப்படம். எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் அவர்களும் நானும் படத்தை எடிட்டிங் செய்து இனிதே மற்றப் பணிகளும் நிறைவடைந்து திரை தொட காத்திருக்கிறது. அடுத்த வாரம் சென்ஸார் போகிறது எனக் கூறியுள்ளார்.