திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (17:35 IST)

''விஜய்67'' படத்திற்கு சம்பளத்தை உயர்த்திய லோகேஷ் கனகராஜ் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில்,  நெல்சன் இயக்கத்தில் வெளியான  இப்படம் ரூ.200 கோடி வசூலித்தது.

இப்படத்தை அடுத்து, தளபதி விஜய் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாக்கத்தில் உள்ளது.

விஜய்யின் அடுத்தடுத்த படங்களை இயக்கப்போகும் இயக்குனர்கள் பற்றிய தகவலும் வெளியாகி வருகிறது. விஜய் 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் திரைக்கதை உருவாக்கத்தில் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் பங்களிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பின், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்67 படத்தை இயக்குவதற்கு ரூ.10 கோடி சம்பளம் பெறுவார் எனவும், கமல் தயாரிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ள லோகேஷுக்கு ரூ.15 கோடி சம்பளம் எனத் தகவல் வெளியான நிலையில், ''விஜய்67'' படத்தை இயக்க அவருக்கு ரூ.25 கோடி சம்பளம் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஷங்கர் உள்ளிட்ட சீனியர் இயக்குனர்களுக்கு அடுத்து, அதிக சம்பளம் பெறும் இயக்குனராக லோகேஷ்  உயர்ந்துள்ளார்.