LIK படத்தின் ஓடிடி வியாபாரம் Lock… வாங்கிய முன்னணி நிறுவனம்!
அடுத்தடுத்து மூன்று ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து தனது முத்திரையைப் பதித்துள்ளார் பிரதீப். அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK என்ற படத்தில் நடித்து வருகிறார். LIK படம் கடந்த ஆண்டே ஆரம்பிக்கப்பட்டாலும், தாமதமான ஷூட்டிங் காரணமாக ரிலீஸ் தாமதமானது.
ஆனால் LIK படத்தின் கதை எதிர்காலத்தில் நடப்பதால் அதில் வி எஃப் எக்ஸ் மற்றும் கிராஃபிக்ஸ் பணிகள் இன்னும் முடியவில்லை. தீபாவளிக்குப் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு அதன் பின்னர் டிசம்பர் 18 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டாலும், இதுவரை ஓடிடி வியாபாரம் முடியாமல் இருந்த நிலையில் தற்போது அமேசான் ப்ரைம் நிறுவனம் படத்தை வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் டிசம்பர் 18 ஆம் தேதி ரிலீஸாவது உறுதியாகியுள்ளது. LIK படத்தில் ப்ரதீப்புடன் க்ரீத்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா மற்றும் சீமான் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க லலித் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கின்றனர்.