ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vm
Last Updated : திங்கள், 18 பிப்ரவரி 2019 (13:27 IST)

இப்படி ஒரு காதல் ஷாக் அடிக்க, இன்னொரு மின்னலே தான் வரவேண்டும்!

இப்படி ஒரு காதல் படத்தை அதுவரை தமிழ் சினிமா பார்த்து இல்லை. 18 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் தான் காதல் சடுகுடு விளையாடினார்கள் மாதவனும் ரீமா சென்னும். 2001ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி  மின்னலே திரைப்படம் தமிழகத்தை தாக்கியது. இளசுகளை சுண்டி இழுத்து காதல் ஷாக் அடித்தது. ஏனோ தெரியவில்லை இன்னுமே மின்னலே போல் ஒரு காதல் படத்தை யாருமே எடுக்கவில்லை. அப்படி ஒரு காதல் காட்சி அமைப்பு, கதை என்பது பெரிதல்ல. காட்சி அமைப்பே பெரிது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் மின்னலே படம்.
மின்னலே படத்தில்  மாதவன், ரீமா சென், அப்பாஸ், நாகேஷ், விவேக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.  இந்த கதைப்படி  அப்பாஸும், மாதவனும் கல்லூரி மாணவர்கள். அப்பாஸ், நன்றாக படிக்கக்கூடியவர். அதேநேரம் மாதவன் கொஞ்சம் அடிதடி மற்றும் கிண்டல் பேர்வழி. இதனால் இருவருக்கும் கல்லூரியில் முட்டிக்கொள்கிறது. இருவரும் எதிரியாக பிரிந்தது செல்கிறார்கள். அப்பாஸ் அமெரிக்கா சென்றுவிடுகிறார். மாதவன் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை செய்கிறார்.
இதனிடையே மாதவன் ஒரு முறை பெங்களூரு செல்கிறார். அங்கு மின்னல் போல் ரீமா சென்னை பார்க்கிறார். அது ஒரு மழை பெயும இரவு, அழகான நடனத்தில் மழை ரசித்து ரீமா சென் ஆடுகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் அருமையான பின்னணி இசையில் அந்த இடத்தையே அழகாக்கி இருந்தார். இந்த சூழலில் ரீமா சென்னை கண்டதும் மனதை பறிகொடுத்த மாதவன்,  மீண்டும் பெங்களூரிலேயே தன் நண்பன் திருமணத்தின்போது ரீமாசென்னை சந்திக்கிறார்.  
அதன் பிறகு தன் நண்பர் விவேக்குடன் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது மீண்டும் மாதவன், ரீமா சென்னை சந்திக்கிறார் இந்நிலையில் ரீமாவை பற்றி. அவரது தோழி மூலம் அறிந்து கொள்கிறார் மாதவன்  அவளது நண்பி மூலம் கறக்கிறான். சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆகி இங்கு வந்து ரீமா சென் வேலைபார்ப்பது மாதவனுக்கு தெரிய வருகிறது.
 
ரீமாசென்னுக்கு திருமணம் நிச்சயம் ஆகியிருப்பதும், மாப்பிள்ளை அமெரிக்காவிலிருந்து 5 நாட்களில்வரவிருப்பதும் அறிந்த மாதவன்  ரீமாவை மறக்க முடியாமல் கவலையில் இருக்கிறார். . அப்போது தாத்தா நாகேஷ் ஒரு யோசனை கொடுக்கிறார். அதன்படி அமெரிக்க மாப்பிள்ளையாக அவதாரம் எடுக்கிறார் மாதவன். ரீமாவின் வீட்டுக்குள் நுழைகிறார்.
உண்மையான மாப்பிள்ளையிடமிருந்து போன் எதுவும் வந்து விடக் கூடாது என்பதற்காக வீட்டு டெலிபோன் இணைப்பைத் துண்டிக்கிறார் மாதவன். அன்று முதல்  காதலைத் தொடங்குகிறார்கள் இருவரும். மாதவனும் ரீமா சென்னும் காதல் கொள்ளும் தருணத்தில் வசீகார என் நெஞ்சினிலே என்ற அற்புதமான ரொமன்ஸ் பாடல் இருக்கும். இதுவரை இப்படி ஒரு காதல் மற்றும் காமம் கொஞ்சும் பாடலை யாருமே நினைத்து பார்த்து இருக்க முடியாது. 
 
அந்த பாடல் 18 வருடங்கள் கடந்து இன்றும் செம்ம ஹிட்டுதான். மாதவனும், ரீமா சென்னும் விழிகள், உடல்கள் மோதி, மௌனங்களே வார்த்தைகள் போல் காதல் மொழி கொஞ்சி வாழ்ந்தார்கள். இந்த காதல் சீனை இன்னும் 50 வருடங்கள் கடந்தாலும் தமிழ்சினிமாவில் மறக்கவே  முடியாது. அப்படி ஒரு ஆற்றல் மிகுந்த காட்சி அமைப்பு.  இதற்கிடையே  இவர்களின்  காதல் 5 நாட்களில் முடிந்த விடுகிறது.
 
நிச்சயதார்த்த நாளின்போது, தான் ஏமாற்றப்பட்டதை உணர்கிறார் ரீமா. மாதவனும் தனது தவறை உணர்கிறார். ரீமாசென்னிடம் மன்னிப்பு கேட்க வீடு செல்கிறார். ஆனால் அதனை ஏற்காமல் ரீமா சென் மாதவனை விரட்டி விடுகிறார். ஆனால் மாதவன், அவளை பல இடங்களில் சந்தித்து மன்னிப்பு கோருகிறார். ஆனால் எந்த பலனும் இல்லை.
இதற்கிடையே , தன் நண்பர்கள் புடை சூழ, அமெரிக்க மாப்பிள்ளையிடமே தனது காதலைச் சொல்லச் செல்கிறார் மாதவன். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. கல்லூரியில் விரோதியாக நினைத்த அப்பாஸ்தான் மாப்பிள்ளை என்பதால் பேரதிர்ச்சி அடைகிறார்.  இருப்பனும் அப்பாஸிடம் தான் ரீமா சென்னை காதலிப்பது பற்றி சொல்கிறார். ஆனால் அப்பாஸ் அதனை ஏற்காமல் விரோதியாகவே நினைத்து மாதவனை வெளியே அனுப்புகிறார்.
 
இருப்பினும் மாதவன். அப்பாஸ், ரீமாசெல்லும் இடங்களில் தொடர்ந்து சென்று தன்னுடைய நிலையை சொல்ல நினைக்கிறார். ஆனால் அது நடக்கவில்லை.
 
இந்த நேரத்தில், மாதவனுடன் பழகிய நாட்களை மனதிற்குள் அசை போட்டு உள்ளுக்குள் அழுகிறார் ரீமா. அப்பாஸ், ரீமா சென்னுக்கு திருமணத்துக்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. திருமணம் நடக்கும் நாளில், ரீமா சென் தன் காதலை உணர்கிறார். இதற்கிடையே அதே நாளில்   தோற்றுப் போன காதலோடு, மாதவன் சிங்கப்பூரில் வேலை கிடைத்து, அங்கு செல்வதற்காக ஏர்போர்ட்செல்கிறார். அங்கு சர்ப்பைரைஸாக  மாதவனிடம் ரீமா சென்னை விட்டு விட்டு அப்பாஸ் செல்வார்.
இது தான் முழு படத்தின் கதை...  இந்த படத்தில்  மாதவனும், ரீமா சென்னும் நிஜ காதலர்கள் போல் வாழ்ந்து இருந்தனர். மின்னலே படத்துக்கு மிகப்பெரிய பலம் என்றால் அது ஹாரிஸ் ஜெயராஜ் இசை தான். இசையில் மின்னலை பாய்ச்சி இருப்பார். பார்ப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் நிச்சயம் மின்னலே படம் காதல் ஷாக் அடித்திருக்கும்.  பம்பாய்ஜெயஸ்ரீ பாடிய வசீகரா, வசீகரா அய்யோ என்ன ஒரு அற்புதமான பாடல், கோலிவுட் பல ஆண்டுகளாக கொண்டிடாடிவரும் பாடல். இதுதவிர   வெண்மதி வெண்மதியே நில்ல, வேறென்ன வேறென்ன வேண்டும், இரு விழி உனது, ஏ அழகிய தீயே என எல்லா பாடல்களுமே காதலர்களை கட்டிப்போட்டது என்றே சொல்லலாம்.
 
முக்கியமான ஒருவரை மறந்து இவ்வளவு நேரம் நாம்  மின்னலே படத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் நாம், அவர் வேறு யாருமல்ல கௌதம் வாசுதேவ் மேனன்தான். இவருக்கு இதுதான் முதல் படம்.   தமிழ் சினிமாவில் மின்னல் போல் ஒரு காதல் படம் வந்தது என்றால் அது மின்னலே தான். அப்ப என்ன ஒரு ஷாக்... மின்னல் தாக்கிவிட்டு சென்று இன்றுடன் 18 வருடங்கள் நிறைவு பெற்றுவிட்டது. கௌதம் மேனன் சார் இன்னொரு மின்னலேவை ஆரம்பியுங்கள். அதுதான் உங்களுக்கு அடையாளம்.  நீங்கள் இந்த படத்தை எடுத்த போது பிறந்தவர்களுக்கு இன்றோடு 18 வயது ஆகிவிட்டது. காதலிக்க கற்றுக்கொடுக்க உங்களுக்கு சொல்லியா தர வேண்டும்... 
நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்.,,
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்   
ஒரே….. ஞாபகம் ஒரே….. ஞாபகம்
 
காதலில் வென்றவர்களுக்கும், காதலில் தோற்றவர்களுக்கும், காதலிப்பவர்களுக்கும் சுகமான அனுபவம் தரும் படம் என்றால் அது மின்னலே தான்....