திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (12:37 IST)

டைமண்ட் பாஸ் இருந்தும் எனது மகள் அனுமதிக்கப்படவில்லை.. ஏஆர் ரஹ்மான் இசைநிகழ்ச்சி குறித்து குஷ்பு..!

டைமண்ட் பாஸ்' இருந்தும் எனது மகள் ஏஆர் ரஹ்மான் இசைநிகழ்ச்சியில் அனுமதிக்கப்படவில்லை என நடிகையும் பாஜக பிரபலமுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் மேலும் கூறியதாவது: இசை நிகழ்ச்சி குளறுபடி விவகாரத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் தோல்வியே இதற்கு காரணம். 
நாம் அனைவரும் இந்த கடினமான சமயத்தில் ரகுமானுக்கு ஆதரவாக நிற்க வேண்டும்
 
டைமண்ட் பாஸ்' இருந்தும் எனது மகள் மற்றும் அவரது நண்பர்களும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஏ.ஆர்.ரகுமான் தனது இசை மூலம் அமைதியையும் அன்பையும் தான் பகிர்ந்துள்ளார், எனவே அவர் மீது யாரும் குற்றஞ்சாட்ட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran