திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 10 அக்டோபர் 2020 (14:51 IST)

அட சிம்புவா இப்படி.. கோவிலுக்கு போனது இதற்காகவா..?

நடிகர் சிம்பு கடந்த சில நாட்களாக கோவில்களில் காணப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது. 
 
நடிகர் சிம்பு வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வந்த நிலையில் அதையடுத்து தற்ப்போது இயக்குனர் சுசீந்தரன் சிம்புவிடம் கிராமியக் கதை ஒன்றை சொல்லி அதை ஓகே வாங்கியுள்ளாராம். 
 
திருப்பதி கோவியில் சாமி தரிசனத்திற்காக வந்த சிம்பு, சுசீந்தரன் படத்தில் தான் நடித்து வரும் கெட்டப் யாருக்கும் தெரியக் கூடாது என எண்ணி முகமூடி அணிந்து தன் முகத்தை மறைத்துக்கொண்டு காரில் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.
 
இதனைத்தொடர்ந்து மதுரையில் உள்ள பிரபல மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற நடிகர் சிம்பு சாமி தரிசனம் செய்தார். அங்கும் கருப்பு நிறத்தில் முகமூடி அணிந்து சாமி தரிசனம் செய்துள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவியது.
 
கொரோனா முடிந்து தொடர்ந்து 40 நாட்கள் சிம்பு படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள இருக்கிறார். எனவே படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக கோவில்களுக்கு என்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோலிவுட் சிம்புவா இப்படி என ஆச்சர்யப்பட்டுள்ளது.