"பேட்ட" யை ஓரங்கக்கட்டி விஸ்வாசம் படத்தை தூக்கிவைத்து கொண்டாடும் கேரளா..!

Last Updated: வெள்ளி, 11 ஜனவரி 2019 (17:21 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படம் அவரின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. 


 
பழைய ரஜினியை அதே ஸ்டைலில் பார்த்த சந்தோஷத்தில் ரஜினியின் ரசிகர்கள் குதூகலித்து வருகின்றனர். மேலும் கடந்த இரு தினங்களாக பேட்ட, விஸ்வாசம் தான் தமிழகத்தின் ஹாட் டாபிக். மாபெரும் ஜாம்பவான்கள் நடித்த இந்த இருபடங்களும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
 
இந்நிலையில் பேட்ட, விஸ்வாசம் இந்த இரண்டு படங்களுமே கேரளாவில் பெரியளவில் ரிலிஸாகியுள்ளது. இதில் விஸ்வாசம் முதல் நாள் விநியோகஸ்தர்கள் ஷேர் ரூ 56 லட்சம் கிடைத்துள்ளதாம்.
 
அதேபோல் ரஜினியின் பேட்ட படத்திற்கு  ரூ 96 லட்சம் கிடைத்துள்ளது, இதன் மூலம் கேரளாவில் ரஜினி லீட்டிங்கில் இருக்கின்றார். இருந்தாலும் , விஸ்வாசம் உரிமை ரூ 2.8 கோடி அதனால், எப்படியும் போட்ட பணம் வந்துவிடுமாம்.
 
ஆனால் பேட்ட அப்படியில்லை ரூ 6.5 கோடி உரிமையில் வாங்கியுள்ளனர், ஆதலால் போட்ட பணம் வருமா? என்ற குழுப்பதில் தத்தளிக்கின்றனர் விநியோகிஸ்தர்கள். 

இருந்தாலும் அங்கு விஸ்வாசம் படம்தான் மாஸ் என்கின்றனர் படத்தை பார்த்த நெட்டிசன்கள் 
 இதில் மேலும் படிக்கவும் :