வெள்ளி, 4 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2024 (19:12 IST)

அரசியலில் இறங்கும் கீர்த்தி சுரேஷ்? கேள்விக்கு அளித்த மழுப்பலான பதில்!

சமீபமாக நடிகர், நடிகைகள் அரசியலுக்கு வருவது அதிகரித்துள்ள நிலையில் தனது அரசியல் பயணம் குறித்து சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார்.

 

 

தமிழில் ரஜினி முருகன் படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது பெண் மைய படங்களை டார்கெட் செய்து நடிக்க தொடங்கியுள்ள கீர்த்தி சுரேஷ் ‘ரகு தாத்தா’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ளார்.

 

சமீபத்தில் ரகு தாத்தா படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் செய்தியாளர்கள், படங்களில் சமுதாய கருத்துகளை சொல்லி நடிக்கத் தொடங்கியுள்ளீர்கள், அடுத்ததாக அரசியலிலும் களமிறங்க திட்டம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினர்.

 

அதற்கு கீர்த்தி சுரேஷ், இப்போதைக்கு அதுபற்றிய திட்டம் இல்லை. இப்போது அரசியல் எண்ணமே இல்லை என்று சொல்லிவிட்டால், பின்னால் அரசியலுக்கு வரும்போது இதுகுறித்து கேள்வி எழுப்புவார்கள் என்று கூறியுள்ளார்.

 

அப்படியென்றால் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா என கேட்கப்பட்டதற்கு, அது வரலாம், வராமலும் இருக்கலாம் என்று மலுப்பலாக பதில் சொல்லியுள்ளார். கீர்த்தி சுரேஷின் தாயார், முன்னாள் நடிகை மேனகா பாஜக கட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K