கட்டப்பா பாகுபலியை கொலை செய்யலையாமே...?


Sasikala| Last Updated: சனி, 27 ஆகஸ்ட் 2016 (15:50 IST)
பாகுபலி படம் வந்தது முதல் இப்போதுவரை காரம் குறையாமல் கேட்கப்படும் கேள்வி, கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார்?

 


பாகுபலி இரண்டாம் பாகத்தில் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார் ராஜமௌலி என்பதை அறிவதற்காகவே பாகுபலி 2 படத்தை ஆவலுடன் உலகம் எதிர்பார்க்கிறது.
 
இப்போது திடீர் திருப்பமாக, பாகுபலி உயிருடனும் இருக்கலாம் என்று புதுக்குண்டை வீசியிருக்கிறார், கதாசிரியரும், ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத்.

 
 
 
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், பாகுபலியை கட்டப்பா குத்தினார் என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால், பாகுபலி உயிருடனும் இருக்கலாம் என்று கூறி, பாகுபலி எதிர்பார்ப்பில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
 
பாகுபலி 2 வெளியாகும்வரை சஸ்பென்சுக்காக காத்திருக்க வேண்டியதுதான்.


இதில் மேலும் படிக்கவும் :