ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வியாழன், 5 ஏப்ரல் 2018 (11:16 IST)

கார்த்திக் சுப்பராஜ் – பிரபுதேவாவின் ‘மெர்க்குரி’ டிரெய்லர் இன்று ரிலீஸ்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘மெர்க்குரி’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது. 
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெர்க்குரி’.பிரபுதேவா இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். சைலண்ட் த்ரில்லர் படமாக,  அதாவது வசனங்கள் எதுவும் இல்லாமல் ரியாக்‌ஷன் மற்றும் இசை மூலம் மட்டுமே காட்சியை உணர்த்துவது. கார்த்திக் சுப்பராஜே தயாரித்துள்ள இந்தப்  படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் மற்றும் மிதூன் ஷர்மா என இருவர் இசையமைத்துள்ளனர்.
 
பிரபுதேவாவுடன் இணைந்து சனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், ஷஷாங்க், அனிஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து ‘மேயாத மான்’ இந்துஜாவும் நடித்துள்ளார். இந்தப் படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகிறது.