கங்கனாவுக்கு வழங்கப்பட்ட விருதுகள் பறிமுதல் செய்து கைது செய்யப்பட வேண்டும்… வலுக்கும் கண்டனங்கள்!
நடிகை கங்கனா ரனாவத் சுதந்திரம் பற்றி பேசிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.
பாலிவுட்டில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வரும் கங்கனா ரனாவத் தமிழில் சமீபத்தில் வெளியான தலைவி படத்தின் மூலம் பிரபலமனார். இவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றவர். ஆனால் வாயைத் திறந்தாலே சர்ச்சைதான். பாஜக மற்றும் இந்துத்வா அமைப்புகளின் தீவிர ஆதரவாளரான இவர் காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்வது வாடிக்கை.
இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கனா ரனாவத் “இந்தியாவிற்கு 1947ல் கிடைத்தது வெறும் பிச்சைதான். இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் 2014ல் தான் கிடைத்துள்ளது” என பேசியுள்ளார். பாஜக ஆதரவாளரான கங்கனா பாஜக ஆட்சியமைத்ததைதான் அப்படி குறிப்பிடுகிறார் என்று பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வருண்காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கங்கனா சுதந்திரத்துக்காக போராடியவர்களை கங்கனா அவமதித்துவிட்டார் என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு வழங்கப்பட்ட விருதுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும் எனவும் கண்டனங்கள் வலுக்க ஆரம்பித்துள்ளன.