இதனால்தான் பாலிவுட்டை நான் சாக்கடை என்கிறேன் – கங்கனா கோப டிவீட்!

Last Modified புதன், 21 ஜூலை 2021 (16:45 IST)

சமீபத்தில் பெண்களை மிரட்டி ஆபாசப் படங்களில் நடிக்க வைத்த வழக்கில் கைது செய்யப்பட்டார் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா.

பிரபல பாலிவுட் நடிகையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளருமான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மும்பையில் நேற்று திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாச படங்களை தயாரித்து ஹாட்ஷாட்ஸ் எனும்
செல்போன் செயலி மூலம் இவர் பணம் சம்பாதிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.
மேலும் 3 பெண்களை கட்டாயப்படுத்தி ஆபாசப் படங்களில் நடிக்க வைத்ததாகவும் அவர்கள் அளித்த புகாரின் பேரில் இவர் கைது செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த கைது நடவடிக்கை பாலிவுட்டின் நிழல் உலகத்தை மற்றுமொரு முறை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத் தன்னுடைய டிவிட்டரில் ‘இதனால்தான் நான் பாலிவுட்டை சாக்கடை என்று கூறி வருகிறேன். மின்னுவதெல்லாம் பொன்னல்ல. எனது அடுத்த படத்தில் இந்த மோசமான உலகை நான் வெளிச்சம் போட்டு காட்ட உள்ளேன். படைப்பாற்றல் துறையில் அறமும் மனசாட்சியும் இருக்க வேண்டும். கண்டிப்பாக ஒரு சாட்டையும் வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :