படவாய்ப்பை வேண்டாம் என சொன்ன பி சி ஸ்ரீராம் –கங்கனாவின் பெருந்தன்மையான பதில்!

Last Modified புதன், 9 செப்டம்பர் 2020 (16:22 IST)

நடிகை கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடிக்கும் படத்தில் இருந்து விலகிவிட்டதாக பிசி ஸ்ரீராம் அறிவித்ததை அடுத்து அவருக்கு கங்கனா பதிலளித்துள்ளார்.

இந்திய சினிமா உலகில் மிகவும் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம். இவர் முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் படங்களில் பணியாற்றியுள்ளார். அத்துடன் தமிழ் ,இந்தி, மலையாளம், போன்ற படங்களிலும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அவர் ஒரு பதியில் தான் கங்கனா ரனாவத் படத்திலிருந்து விலகி விட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தில் தான் ஏன் பணியாற்றவில்லை என்று தயாரிப்பாளருக்கு விளக்கிவிட்டதாகவும் அவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துகள் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த டிவிட் ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிசி ஸ்ரீராமுக்கு பதிலளிக்கும் விதமாக கங்கனா தன்னுடைய சமூகவலைதளத்தில் ‘உங்களைப் போன்ற ஜாம்பவானுடன் பணிபுரியும் வாய்ப்பை இழந்துள்ளேன். எனக்கு தெரியவில்லை… எது என்னுடன் வேலை பார்க்க வேண்டாம் என உங்களை நினைக்க வைத்தது என. ஆனால் நீங்கள் சரியான முடிவை எடுத்துள்ளீர்கள். உங்களுக்கு என் வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :