ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2016 (13:14 IST)

கமல் படத்துக்கு பெயர் வைக்கும் இளையராஜா

கமல் படத்துக்கு பெயர் வைக்கும் இளையராஜா

கமலின் புதிய படம் வரும் 29 -ஆம் தேதி நடிகர் சங்க இடத்தில் தொடங்குகிறது. டி.கே.ராஜீவ் குமார் படத்தை இயக்க கமலுடன் அவரது மகள் ஸ்ருதி நடிக்கிறார். 


 
 
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது. படத்தின் தமிழ் பெயரை இளையராஜா தேர்வு செய்திருப்பதாக கமல் கூறினார்.
 
கமலின் ராஜ்கமல் தயாரிப்பில் உருவாகும் படங்களுக்கு இளையராஜாவே பல வருடங்களாக இசையமைத்து வந்தார். சமீபத்தில் அந்த வழக்கம் மாறியது. இப்போது மீண்டும் - ஏறக்குறைய 11 வருடங்களுக்குப் பிறகு - கமல் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். படத்திற்கு அவரே நல்ல தமிழ்ப் பெயராக தேர்வு செய்துள்ளார்.
 
படத்தின் தொடக்கவிழாவில் அதனை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.