சுதந்திர தினத்தில் காஜல் அகர்வாலின் இரட்டை சந்தோஷம்!

பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு விஜய்யுடன் நடித்த மெர்சல் படத்திற்கு பின் வேறு தமிழ் படங்கள் வெளியாகவில்லை. அவர் நடித்த தமிழ்ப் படமான 'பாரிஸ் பாரிஸ்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருப்பினும் இன்னும் அந்த படம் வெளியாகவில்லை
இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் அவர் நடித்த இரண்டு படங்கள் வெளியாகவிருப்பதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஜெயம் ரவியின் வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள 'கோமாளி' என்ற திரைப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இந்தப் படத்தில் காஜல் அகர்வாலுக்கு கதையுடன் கூடிய முக்கிய கேரக்டர் என்பதால் இந்த படம் தனக்கு ஒரு திருப்புமுனையை தரும் என்று அவர் நம்பிக்கையுடன் உள்ளார்.
அதேபோல் அதே ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தில் காஜல் அகர்வால் நடித்த தெலுங்கு திரைப்படமான 'ரனரங்கம்' என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
சர்வானந்த் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் காஜல் அகர்வால் நாயகியாகவும், இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். த்ரில் கதையம்சம் கொண்ட இந்த படத்தை சுதீர்வர்மா என்பவர் இயக்கியுள்ளார். ஒரே நாளில் தான் நடித்த இரண்டு திரைப்படங்கள் வெளியாகவுள்ள இரட்டை சந்தோஷம் குறித்து காஜல் அகர்வால் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :