குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள்: மன்னிப்பு கேட்ட கே.பாக்யராஜ்
இன்று காலை நடந்த புத்தக வெளியீட்டுவிழாவில் மோடியை விமர்சனம் செய்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று இயக்குனர் பாக்யராஜ் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் தனது பேச்சுக்கு இயக்குநர் கே பாக்யராஜ் மன்னிப்பு கேட்டுள்ளார். குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று கூறியது மாற்றுத்திறனாளிகளை அல்ல என்றும் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் ஒருவேளை தனது கருத்து யாரையாவது புண்படுத்தி இருந்தால் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் பாக்யராஜ் கூறியுள்ளார்
மேலும் தான் திராவிட தலைவர்களை பார்த்து வளர்ந்தவன் என்றும் தன்னுடைய படத்திலும் திராவிட கொள்கை தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்