ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 13 மார்ச் 2021 (14:10 IST)

வேற லெவல் டான்ஸ்... ஆட்டம் போடவைக்கும் தமன்னாவின் Jwala Reddy பாடல்!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியான தமன்னா இந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர் 2006ம் ஆண்டு வெளியான கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அதையடுத்து இரண்டாவது படமான "கல்லுரி" படத்தில் ஹிட் நடிகையாக பேசப்பட்டார்.
 
தொடர்ந்து அஜித் , விஜய் , தனுஷ் , கார்த்தி , சூர்யா உள்ளிட்ட பல உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சூப்பர் ஹிட் நடிகையாக வலம் வந்த தமன்னா பாகுபலி படத்திற்கு பிறகு உலகம் முழுக்க பெரும் பிரபலமானார். இந்நிலையில் நடிகை தமன்னா தெலுங்கில் Seetimaarr ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார்.
 
கோபிசந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை சம்பத் நந்தி இயக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெறுள்ள Jwala Reddy எனும் வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. இந்தப்பாடல் மியூசிக் அப்டியே ஈசன் படத்தில் இடம்பெற்ற வந்தானம்மா வந்தானம்மா என்கிற பாடல் போலவே இருப்பதாக தமிழ் சினிமா ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த பாடல் வீடியோ...