வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 14 செப்டம்பர் 2020 (11:24 IST)

சூர்யாவின் கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்துவிடலாம்… ஆதரவாக மற்றொரு நீதிபதி!

நடிகர் சூர்யா நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் அவமதித்து விட்டதாக வெளியான செய்திகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நேற்று நீட்தேர்வு குறித்தும் நீட் தேர்வால் பாதிக்கப்படும் மாணவர்கள் குறித்தும் காரசாரமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கை ஆளும் மத்திய மாநில அரசுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது குறித்த ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் சூர்யாவின் அறிக்கையில் நீதிமன்றம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். கொரோனாவுக்கு பயந்து காணொளி மூலம் நீதிமன்ற தீர்ப்புகளை வழங்கி வரும் நீதிமன்றம், மாணவர்களை மட்டும் அச்சமின்றி தேர்வு எழுத உத்தரவிடுகிறது என்ற வரிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த வரிகள் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் அவர்கள் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சூர்யாவின் இந்த கருத்தை நீதிபதிகள் மற்றும் சென்னை ஐகோர்ட்டின் நேர்மையையும் திறமையையும் அவமதிக்கும் வகையில் உள்ளதாகவும் சூர்யாவின் இந்த கருத்தின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் நீதிபதி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மற்றொரு நீதிபதியான சுதந்திரம் சூர்யாவின் கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்துவிடலாம் எனக் கூறியுள்ளார். சூர்யா நீட் தேர்வு குறித்த கோபத்தின் வெளிப்பாடாக இவ்வாறு கூறி இருக்கலாம் என்றும் கூறிய அவர் ‘கூட்டம் மிகுந்த நீதிமன்ற நடைமுறைகளை ஒரு நாள் நடக்கும் நீட்தேர்வு நடைமுறையுடன் ஒப்பிட முடியாது.’ எனக் கூறியுள்ளார்.