ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 17 டிசம்பர் 2020 (13:35 IST)

திமுகவில் இணையும் சத்யராஜ்‌ மகள்‌ திவ்யா ??

சத்யராஜ்‌ மகள்‌ திவ்யா திமுகவில் இணைய உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. 
 
சத்யராஜ்‌ மகள்‌ திவ்யா ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர்‌. இவர்‌ கொரோனா நேரத்தில்‌ தமிழ்‌ மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க ''மகிழ்மதி'' என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்‌.
 
சில வருடங்களுக்கு முன்‌ மருத்துவ துறையில்‌ நடக்கும்‌ முறைகேடுகள்‌ பற்றியும்‌ நீட்‌ தேர்வை எதிர்த்தும்‌ திவ்யா சத்யராஜ்‌ பிரதமர்‌ மோடிக்கு எழுதிய கடிதம்‌ சமூக வலைதளங்களில்‌ வைரல்‌ ஆனது. 
 
அரசியலில் ஆர்வம் கொண்ட இவர் அவ்வப்போது அரசியல் ரீதியான கருத்துக்ககளையும் முன்வைத்து வந்தார். இந்நிலையில் இவர் திமுகவில் இணைய உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது.