அபிராமி ராமநாதனுக்கு "கலியுக கர்ணன்" விருது வழங்கிய இளையராஜா
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதனுக்கு "கலியுக கர்ணன்" விருது வழங்கப்பட்டது.
பிரபல திரையரங்கு உரிமையாளரும், திரைப்பட விநியோகிஸ்தருமான அபிராமி ராமநாதன் மற்றும் அவரது மனைவி நல்லம்மைராமநாதன் ஆகியோருக்கு "கலியுக கர்ணன்" விருதை இசைஞானி இளையராஜா வழங்கி கெளரவித்தார். இந்த விழாவில் நடிகர்கள் சரத்குமார், ராதாரவி ,தொழிலதிபர் பழனி ஜி.பெரியசாமி ,டைமண்ட் பாபு ஆகியோர் பங்கேற்றனர்.