தொடர்புடைய செய்திகள்
- இளையராஜாவின் சிம்ஃபொனி நிகழ்ச்சி சென்னையில் எப்போது?.. ஆலோசனை!
- ஏ ஆர் ரஹ்மான் இளையராஜாவிடம் உதவியாளராக பணியாற்றவில்லை- ஜேம்ஸ் வசந்தனின் பதிவு!
- கோவையில் என் கால் படாத இடங்களே இல்லை- இசைக் கச்சேரி குறித்து இளையராஜா நெகிழ்ச்சி!
- ‘இளையராஜா பணத்தாசைப் பிடித்தவர் இல்லை.. அவர் கேட்பது இதுதான்’ … விஜய் ஆண்டனி ஆதரவு
- இளையராஜா எதிர்பார்ப்பது பணம் அல்ல… இயக்குனர் சி எஸ் அமுதன் ஆதங்கம்!
சென்னையில் இளையராஜாவின் சிம்ஃபொனி இசைக் கச்சேரி எப்போது?... வெளியான தகவல்!
உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் அறிமுகம் தேவையில்லாத நபர்களில் ஒருவர் இசையமைப்பாளர் இளையராஜா. லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரையும், அவரது பாடல்களையும் தங்கள் மூச்சுக்காற்றாகவே நினைத்து வருகின்றனர். தன்னுடைய 82 ஆவது வயதிலும் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டும் உலகம் முழுவதும் சுற்றி வந்து இசைக் கச்சேரிகள் செய்வது என்றும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.
கடந்த ஆண்டு இறுதியில் தான் சிம்பொனி ஒன்றை உருவாக்கி உள்ளதாக இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். Valiant எனப் பெயரிடப்பட்டுள்ள அவரின் முதல் சிம்பொனி குறித்து தகவல் வெளியானதும், உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களிடம் இருந்து ஆரவாரமாக வாழ்த்துகள் குவிந்தன. பல அரசியல் தலைவர்கள் நேரை சந்தித்து வாழ்த்தினர். மார்ச் 8 ஆம் தேதி தன்னுடைய முதல் சிம்ஃபொனியை அரங்கேற்றினார்.
இதையடுத்து அவரை சந்தித்து வாழ்த்துக் கூறிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இசைஞானியின் சிம்ஃபொனி தமிழக அரசு சார்பில் சென்னையில் நிகழ்த்தப்படும் என அறிவித்தார். அந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் அரங்கேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப் பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.அதற்கான தேதி பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் செப்டம்பர் 13 ஆம் தேதி நடக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
