திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 4 ஜூலை 2017 (18:07 IST)

கட்டப்பா கதாபாத்திரம் கிடைத்திருந்தால் அவரை விட நன்றாக நடித்திருப்பேன்; புலம்பும் பாலிவுட் நடிகர்

பாகுபலி திரைப்படத்தில் சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் எனக்கு கிடைத்திருந்தால் அவரை விட நன்றாக நடித்திருப்பேன் என பாலிவுட் நடிகர் குல்சன் குரோவர் தெரிவித்துள்ளார்.


 

 
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சத்யராஜ் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்தார். படத்தில் பாகுபலிக்கு அடுத்து சிவகாமி வரிசையில் கட்டப்பா கதாபாத்திரமும் ரசிகர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் பாலிவுட் வில்லன் நடிகர் குல்சன் குரோவர் சத்யராஜ் நடிப்பை விமர்சிக்கும் வகையில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-
 
பாகுபலி படத்தில் இடம்பெற்ற கட்டப்பா கதாபாத்திரம் எனக்கு கிடைத்திருந்தால் நன்றாக செய்திருப்பேன். அந்த கதாபாத்திரத்துக்கு தேவையான தகுதிகளும் என்னிடம் உள்ளது. சத்யராஜ் நன்றாக அவரது பணியை செய்துள்ளார். எனது கருத்தை ஏற்கனவே நான் ராஜமௌலியிடம் பகிர்ந்து கொண்டேன் என்றார்.
 
இவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது தனது விருப்பத்தை தெரிவிக்கும் போது சற்று அவரை தூக்கி பேசியது, சத்யராஜ் நடிப்பை விமர்ச்சிக்கும் வகையில் உள்ளது.