திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2022 (08:42 IST)

’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற இந்தி எதிர்ப்பு வசனம்!

Beast
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தில் இந்தி எதிர்ப்பு வசனம் இடம்பெற்றுள்ளதை அடுத்து அனைவரும் அந்த வசனத்தை ரசித்து வருகின்றனர் 
 
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் உங்களுக்காக நான் இந்தி கற்றுக்கொள்ள முடியாது என்றும் தேவை என்றால் நீங்கள் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் என்றும் விஜய் ஒரு வசனம் பேசுகிறார் 
 
இந்த வசனத்தின் போது திரையரங்குகளில் ரசிகர்கள் கை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்
 
தமிழகத்தில் இந்தி மொழி பல ஆண்டுகளாக எதிர்க்கப்பட்டு வரும் நிலையில் விஜய் பேசிய இந்த வசனம் ரசிகர்களுக்காக திணிக்கப்பட்டதா? அல்லது இயல்பாகவே இடம்பெற்றதா? என்பதை படக்குழுவினர்களின் முடிவுக்கே விட்டு விடலாம்