ஞாயிறு, 7 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 9 ஜூலை 2025 (10:35 IST)

பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீர மல்லு’ படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றிய பிரபல விநியோகஸ்தர்!

பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீர மல்லு’ படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றிய பிரபல விநியோகஸ்தர்!
தெலுங்கு சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவரான பவன் கல்யாண், தனது சினிமா கேரியரில் முதன்முறையாக 'ஹரி ஹர வீர மல்லு' என்ற பீரியட் ஆக்‌ஷன் அட்வென்ச்சர் கதையில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தனது புகழ்பெற்ற மெகா சூர்யா புரொடக்ஷன்ஸ் மூலம் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்து இப்போது ரிலீஸை நெருங்கியுள்ளது.

17-ஆம் நூற்றாண்டில் நடக்கும் ஆக்‌ஷன் அட்வென்சர் கதை என்பதால் அதற்கேற்றவாறு சார்மினார், செங்கோட்டை மற்றும் மச்சிலிப்பட்டினம் துறைமுகம் போன்ற பிரம்மாண்டமான செட்களை அமைத்துப் படமாக்கியுள்ளனர். இந்த படத்தில் பாபி தியோல் வில்லனாக நடிக்க, சத்யராஜ் மற்றும் நிதி அகர்வால் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படம் பலகட்ட தாமதங்களுக்குப் பிறகு தற்போது ஜூலை 24 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதையொட்டி படத்துக்கான ப்ரமோஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ்நாட்டு விநியோக உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.