ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 மே 2018 (17:41 IST)

அம்மாவின் பாடலுக்கு ஆட மறுத்த ஜான்வி கபூர்

நடிகை சோனம் கபூர், ஆனந்த் அஹுஜா என்பவரை காதலித்து திருமணம் செய்ய இருக்கிறார். நாளை இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது. பாலிவுட் நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு பிறகு கபூர் குடும்பத்தில் நடக்கும் முதல் சுபகாரியத்தில் ஜான்வி நடனமாடுவார் என்று கூறப்பட்டது. ஆனால்  அதனை மறுத்துள்ளார் ஜான்வி கபூர்.
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தம்பி மகளும், பாலிவுட் நடிகையுமான சோனம் கபூர் தனது காதலர் ஆனந்த் அஹுஜாவை நாளை திருமணம் செய்து செய்ய உள்ளார். இந்நிலையில், நேற்று மெஹந்தி நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் இன்று சங்கீத் நிகழ்ச்சி நடக்கிறது.
இதனை தொடர்ந்து ஜான்வி கபூரும், குஷி கபூரும் மெஹந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இன்று நடக்கும் சங்கீத் நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் பட பாடலுக்கு ஜான்வி நடனமாடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அம்மா பட பாடலுக்கு என்னால் நடனமாட முடியாது என்று ஜான்வி கபூர் மறுத்துவிட்டாராம்.  மேலும் ஸ்ரீதேவியின் தேசிய விருதை வாங்க டெல்லி சென்ற இடத்திலும், அம்மாவை நினைத்து ஜான்வி அழுததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
பாலிவுட் நடிகை சோனம் கபூரின் உடை அணியும் விதத்திற்கு பின்னால் அவரது பெரியம்மா ஸ்ரீதேவி இருப்பதாக முன்பே ஒருமுறை சோனம் தெரிவித்திருந்தார். பெரியம்மா இறந்த நிலையில் நடக்கும் இந்த திருமணத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டாம் என்று சோனம் தனது தந்தை அனில் கபூரிடம்  தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.