1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified திங்கள், 19 செப்டம்பர் 2022 (14:38 IST)

பிரபல சீரியல் நடிகை நிஷி சிங் மரணம் ….

nishi singh
பிரபல தொலைக்காட்சி நடிகை நிஷி சிங் கடந்த 3 ஆண்டுகளோகப் பக்கவாதத்துடன் போராடி வந்தார்.  நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தொலைக்காட்சி நடிகை குபூல் ஹை நடிகர் நிஷி சிங்(50). இவர்,   ஹிட்லர், திதி,நிஷ்க்பாஸ் மற்றும் தெனாலிராமன் போன்ற நிகழ்ச்சிகளிலும்  நடித்திருந்தார்.

கடந்த, 2019 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அதன், மூன்றாண்டுகளாக இதற்குச் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து  நிஷி சிங்கின்  கணவர்  அவரது இறப்பு குறித்து, சில வாரங்களுக்கு முன்பு, கடுமையான தொண்டை வலி இருந்தது. இதனால், திட உணவுகள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, திரவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வந்தார்.

செப்டம்பர் 16 ஆம் தேதி அவருக்கு பிறந்த நாளின்போதும் அவரால் பேசமுடியவில்லலை.  சில நாட்களாக கடுமையான போராட்டத்தைச் சந்தித்த அவர்  நேற்று பிற்பகல் 3 மணியளவில் உயிரிழந்தார் என்று தெரிவித்துள்ளார்.