திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 19 நவம்பர் 2022 (20:50 IST)

நடிகை சார்மி, பூரி ஜெகன்நாத்திடம் அமலாக்கத்துறை விசாரணை

நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகன் நாத் ஆகிய இருவரிடமும் அ மலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி  நடிகர் விஜயதேவரகொண்டா. இவர் நடிப்பில், பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் லைகர்.

இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளருக்கு நஷ்டம் கொடுத்துள்ளாதாக  கூறப்படுகிறது.

இப்படத்திற்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என தெலுங்கு விநியோகஸ்தர்கள்  போராட்டம் நடத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  இயக்குனர் பூரி ஜெகன் நாத் மற்றும் நடிகரி சார்மி ஆகிய இருவரையும் நேரில் வந்து ஆஜராகும்படி, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

இந்த நிலையில் இருவரும் இன்று நேரில் ஆஜராகினர். இவர்களிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

லைகர் படத்திற்கு கருப்புப் பணம் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக இவர்கள் இருவரிடமும் விசாரணை நடந்தது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj