திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 26 ஆகஸ்ட் 2023 (14:49 IST)

உதவி கேட்டு வந்த முதியவர்கள்... உடனே உதவி செய்த விஜய் மக்கள் இயக்க பொ.செ.,புஸ்ஸி ஆனந்த்

உதவி கேட்டு வந்தவர்களுக்கு உடனடியாக உதவி செய்த விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்,.

நடிகர் விஜய் சமீபத்தில், கல்வி விழா நடத்தினார். அதன்பின்னர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் நடைபெற்றது.

இதையடுத்து, மாணவர்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் இலவச கல்வி பயிலகம் நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.  இதையடுத்து, இலவச சட்ட ஆலோசனை மையம் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த  நிலையில், இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் தலைமை அலுவலகத்தின், மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபபெற்ற இக்கூட்டத்தில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் இருந்து சமூக வலைதளங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட 1000 பேர் பங்கேற்றனர்.

விஜய் மக்கள் இயக்கம் அடுத்து வேற ஒரு பரிமாணம் எடுக்க உள்ளது என்றும் தமிழ்நாடு அளவில் பலம் வாய்ந்த இயக்கமாக விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.

இந்த கூட்டத்திற்கு வந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வந்து சந்தித்த இரண்டு வயதான முதியவர்கள், ''தங்களுக்கு வேலையில்லை, வருமானத்திற்கு வழியில்லை'' என்று கூறினர். இதைக்கேட்டு, தன் சட்டப் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து முதியவரிடம் கொடுத்த மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ''உங்கள்  முகவரியை  மாவட்ட தலைவரிடம் கொடுத்துச் செல்லுங்கள் மாதம் தோறும் வீட்டிற்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் தளபதியிடம் சொல்லிவிட்டு அனுப்பப்படும், சாப்பிடவில்லை என்றால் சாப்பிட்டுச்  செல்லுங்கள் என்றார்.