திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 12 மே 2020 (17:56 IST)

ஸ்டாலினின் ஒன்றிணைவோம் வா நலத்திட்டம் – ரஜினியின் பாடல் ஏன் ?

திமுக அறிவித்துள்ள ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் வழங்கப்படும் உதவிகளில் ரஜினியின் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவி செய்வது போல தன்னார்வலர்களும் உதவி செய்து வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக தமிழக எதிர்க்கட்சியான திமுகவும் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் மூலம், தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு அழைத்து உதவிக் கேட்பவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது திமுக. இது சம்மந்தமான வீடியோக் காட்சிகளை ப்ரோமோஷன் பணிகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். அதில் ரஜினிகாந்தின் அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் இடம்பெற்ற கடவுள் உள்ளமே கருணை இல்லமே என்ற பாடலைப் பயன்படுத்தி உள்ளனர்.

இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக இணைய திமுகவினருக்கும் ரஜினியின் மக்கள் மன்றத்தினருக்கும் இடையே புகைச்சல் எழுந்துள்ளது.