இயக்குனர் எஸ்பி முத்துராமன் மருத்துவமனையில் அனுமதி: திரையுலகினர் அதிர்ச்சி

இயக்குனர் எஸ்பி முத்துராமன் மருத்துவமனையில் அனுமதி
siva| Last Modified வியாழன், 8 ஏப்ரல் 2021 (10:46 IST)
இயக்குனர் எஸ்பி முத்துராமன் மருத்துவமனையில் அனுமதி
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் எஸ்பி முத்துராமன் என்பது தெரிந்ததே. குறிப்பாக ஏவிஎம் தயாரித்த பல படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் எஸ்பி முத்துராமன் கடந்த 1992ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த பாண்டியன் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு பின் அவர் தொட்டில் குழந்தை என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கினார் என்பதும் அதன் பின்னர் வயது காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று எஸ்பி முத்துராமன் அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து அந்த தனியார் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் எஸ்பி முத்துராமன் அவர்களுக்கு கொரோனா தொற்றி அறிகுறி இருப்பதை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதுஇதில் மேலும் படிக்கவும் :