திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (15:18 IST)

புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குனர் மரணம் !

panikar
மலையாள சினிமாவில் 1980களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் ஜி.எஸ்.பணிக்கர். இவர் இயக்கத்தில் வெளியான முதல் படம் இககினி.இப்படததில் பிரபல நடிகை ஷோபா, இந்திரபாலன், ரவிமேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தை அடுத்து, வாசரஸய்யா, சக்யன்டே மகன், பாண்டவபுரம் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

சில ஆண்டுகளுக்குப் பின் சினிமாவில் இருந்து விலகிய இயக்குனர் பணிக்கர், சமீபத்தில் டிரீம்ஸ் என்ற படத்தை இயக்க இருந்தார். இந்த நிலையில்  அவருக்கு புற்று  நோய் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், இதற்காக மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.
நோய் பாதிப்பு அதிகரித்ததை அடுத்து, சென்னையில் அரசு மருத்துவர் கல்லூரியில் பணிக்கர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இவர் மறைவுக்கு சினிமாத்துரையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.