1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By BALA
Last Modified: வெள்ளி, 13 பிப்ரவரி 2026 (14:22 IST)

ரஜினியின் ரெஃபெரன்ஸ் வச்சுதான் எடுத்தோம்! விஜய் படத்தில் நடந்த மேஜிக்

ரஜினியின் ரெஃபெரன்ஸ் வச்சுதான் எடுத்தோம்! விஜய் படத்தில் நடந்த மேஜிக்
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி இவர்களுக்கு பிறகு பெரியளவில் பேசப்பட்ட நடிகர்கள் ரஜினி கமல். ஒரு கட்டத்திற்கு பிறகு கமல் மவுசு குறைய தொடங்கியது. கமலை பொறுத்தவரைக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களாகவே எடுக்க ஆரம்பித்தார். அதனால் அது ரசிகர்களுக்கு புரியவில்லை. ஆனால் ரஜினியோ மாஸ் , ஆக்‌ஷன் என ரசிகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் அப்படியான கதைகளை தேர்ந்தெடுத்தார்.
 
அது அவரை வேற லெவலுக்கு கொண்டு போய் நிறுத்தியது. இப்போது வரை மாஸ் நடிகர், உச்ச நடிகர் என்றாலே முதல் இடத்தில் இருப்பது ரஜினிதான். வசூல் சக்கரவர்த்தியாகவும் திகழ்ந்து வருகிறார். அவர் படம் ரிலீஸாவதற்கு முன்பே வியாபாரம் களை கட்டுகிறது. ரிலீஸுக்கு முன்பே போட்ட முதலீட்டை எடுத்துவிடுகிறார்கள் தயாரிப்பாளர்கள். அப்படியான ஒரு அந்தஸ்தில்தான் விஜயும் இருக்கிறார்.
 
ஒரு கட்டத்தில் ரஜினி விஜய் போட்டி சமூக வலைதளத்தில் கொளுந்துவிட்டு எரிந்தது. ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் மாறி மாறி டிவிட்டர் , இன்ஸ்டா என கடுமையாக சண்டை போட்டுக் கொண்டனர். அதன் பிறகு ஒரு இசை வெளியீட்டு விழாவில் நான் பார்த்து வளர்ந்த பையன் விஜய் என ரஜினி சொல்லி அந்த சண்டையை ஆஃப் செய்தார். அதன் பிறகு அப்படியான மோதல் வெடிக்கவே இல்லை.
 
ஆனால் உள்ளுக்குள் ஏதாவது ஒரு வகையில் புகைந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் விஜய் படத்தில் ரஜினியை ரெஃபரன்ஸாக வைத்துதான் ஒரு காட்சியை எடுத்தோம் என சம்பந்தப்பட்ட பட இயக்குனர் கூறியுள்ளார். அதாவது விஜய் இரண்டு வேடங்களில் நடித்த  படம் அழகிய தமிழ் மகன். அதில் அனைவருக்கும் பிடித்த பாடல் மதுரைக்கு போகாதடி பாடல்.
 
அதில் ஒரு காட்சியில் கழுத்தில் பெரிய மாலையுடன் வேட்டி சட்டை அணிந்தவாறு விஜய் நடந்துவருவார். அது எஜமானில் ரஜினியை ரெஃபரன்ஸாக வைத்துதான் எடுத்தோம் என அந்தப் படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.