வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 28 செப்டம்பர் 2023 (21:02 IST)

நான் உழைத்து சம்பாதித்த பணம் ஊழலுக்கு போனதா??? விஷால் வேதனை

vishal
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால். இவரது நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மார்க் ஆண்டனி.

இப்படத்தில் விஷாலுடன் இணைந்து, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது.

இந்த நிலையில்,  மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிடுவதற்கு மும்பையில்  உள்ள சென்சார் போர்டு அதிகாரிகள் ரூ.6. 5 லட்சம் பெற்றதாக விஷால் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர்,  ஊழல் பற்றி படங்களில் காட்டுவது சரிதான் ஆனால், நிஜ வாழ்வில்  ஊழல் நடப்பதை என்னால் பொருத்துக்கொள்ள முடியவில்லை என்று அதில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாவில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

‘’ஊழலை வெள்ளித்திரையில் காட்டுவது பரவாயில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் இல்லை. ஜீரணிக்க முடியாது. குறிப்பாக அரசு அலுவலகங்களில். இன்னும் மோசமானது #CBFC மும்பை அலுவலகத்தில் இது நடக்கிறது. எனது திரைப்படம் மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்புக்கு 6.5 லட்சம் செலுத்த வேண்டியிருந்தது. 2 பரிவர்த்தனைகள். திரையிடலுக்கு 3 லட்சம் மற்றும் சான்றிதழுக்கு 3.5 லட்சம். எனது கேரியரில் இந்த நிலையை சந்தித்ததில்லை. இன்று திரைப்படம் வெளியானதில் இருந்து சம்பந்தப்பட்ட மத்தியஸ்தர் மேனகாவுக்கு நிச்சயமாக பணம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. இதை மகாராஷ்டிராவின் மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் எனது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதை செய்வது எனக்காக அல்ல எதிர்கால தயாரிப்பாளர்களுக்காக. நான் உழைத்து சம்பாதித்த பணம் ஊழலுக்கு போனதா??? அனைவரும் கேட்கும் வகையில் ஆதாரத்தை இத்துடன் இணைத்துள்ளேன். எப்போதும் போல் உண்மை வெல்லும் என்று நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.