1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (15:46 IST)

இந்த ஆண்டே வெளியாகிறது ”துருவ நட்சத்திரம்”?? – விக்ரம் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

Dhuruva Natchathiram
விக்ரம் நடித்து பல ஆண்டுகளாக வெளியாகாமல் உள்ள துருவ நட்சத்திரம் இந்த ஆண்டே வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் கௌதம் மேனன் நடிப்பில் விக்ரம் நடிக்க தொடங்கிய படம் “துருவ நட்சத்திரம்”. கடந்த 2018 வாக்கில் தொடங்கப்பட்ட இந்த படம் 4 வருடங்களாகியும் பல்வேறு காரணங்களால் முடிவடையாமல் உள்ளது.

இதற்கிடையே நடிகர் விக்ரம், கோப்ரா, பொன்னியின் செல்வன், மகான் உள்ளிட்ட படங்களை நடித்து வந்தார். இயக்குனர் கௌதம் மேனனும் “வெந்து தணிந்தது காடு” எடுக்க தொடங்கினார். தற்போது கௌதம் மேனனுக்கு “வெந்து தணிந்தது காடு” ஹிட் அடித்துள்ளது.

அதேபோல விக்ரமுக்கும் பொன்னியின் செல்வன் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதனால் இந்த சமயத்திலேயே துருவ நட்சத்திரத்தை வெளியிடலாம் என படக்குழு திட்டமிட்டு வருகிறதாம். மிச்ச சொச்ச பணிகளை முடித்து இந்த ஆண்டு டிசம்பரிலேயே படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த டிசம்பரிலேயே துருவ நட்சத்திரம் வெளியானால், இந்த ஆண்டில் நடிகர் விக்ரமின் மூன்று படங்கள் வெளியாகியிருக்கும்.

Edited By: Prasanth.K