தனுஷின் 25 -வது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Geetha priya| Last Modified திங்கள், 14 ஜூலை 2014 (11:40 IST)
தனுஷின் 25 - வது படமான வேலையில்லா பட்டதாரியின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 18 -ம் தேதி படம் திரைக்கு வருகிறது.
துள்ளுவதோ இளமை மூலம் சினிமாவுக்கு வந்த தனுஷ் குறுகிய காலத்தில் இந்திய அளவில் சிறந்த நடிகராக பிரபலமானார். இந்த காலகட்டத்தில் நடிகராக மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல துறைகளில் அவர் முத்திரை பதித்துள்ளார். 
 
வேலையில்லா பட்டதாரி தனுஷின் 25 -வது படம். இதில் நடிகராக மட்டுமின்றி படத்தின் திரைக்கதை, வசனம், காட்சிகள் என அனைத்திலும் தனது பங்களிப்பை செலுத்தியுள்ளார். இயக்குனராகும் தனுஷின் ஆசைக்கு வெள்ளோட்டமாக வரும் படம் இது என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில்.
Velaiyilla Pattathari, வேலை‌யி‌ல்லா ப‌ட்டதா‌ரி, தனுஷ், அமலா பா‌ல்
பொல்லாதவன், ஆடுகளம் படங்களின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகியுள்ளார். அமலா பால் ஹீரோயின். தனுஷின் அப்பாவாக சமுத்திரகனியும், அம்மாவாக சரண்யாவும் நடித்துள்ளனர். காமெடிக்கு விவேக். அனிருத் இசையமைப்பில் அனைத்துப் பாடல்களும் ஏற்கனவே ஹிட்.
 
தனுஷின் வுண்டர்பார் படத்தை தயாரித்துள்ளது. படத்தின் தமிழக விநியோக உரிமையை வாங்கியவர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன். அனைத்து ஏரியாக்களும் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன.
 
சமீபத்தில் படம் சென்சாருக்கு திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் யு சான்றிதழ் தந்துள்ளனர். இதையடுத்து வரும் 18 -ம் தேதி படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். அன்று திருப்பதி பிரதர்ஸின் சதுரங்க வேட்டையும் வெளியாகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :